18, 20 வருடங்களுக்குமுன் ஒரு இலக்கியக்கூட்ட மண்டபத்தில் எனது புகைப்படக் கண்காட்சியும் காட்சிப் படுத்தலாகியிருந்தது.
அன்று பேசும்போது,
"எனது கவிதைகளைப் புரிந்துகொள்ள உங்களிற் பலருக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தாலும் முடியாது" என்று சொன்னேன்.
கடுப்பாகி விட்டார்கள் நண்பர்கள்.
(அது, ஒரு பதிலை வந்தடைய அப்போதைக்கு நண்பர்களைக் கடுப்பேற்றச் சொன்னதுதான் என்றே வைத்துக் கொள்வோம்)
"எங்க காட்டு உன்ர கவிதைகளை"
"அதைதான் இவ்வளவு நேரம் சுவரில் சட்டகத்துள்ளும், திரையில் இசையுடனும் பார்த்தீர்கள்" என்றேன்.
நண்பர்களின் பார்வைகளோ கொஞ்சம் கேலியும், கொஞ்சம் கேள்விகளுமாக. .
"ஈழத்துக் கலை இலக்கியத்தைப் பொறுத்தவரை புகைப்படம் என்பது ஒரு கலையாக இன்னமும் பரிணமிக்கவில்லை என 1986இல் யாழில் சொன்னதைத்தான் மீண்டும் இங்கே சொல்கிறேன் நண்பர்களே" என திரும்பவும் அழுத்தமாகவே சொன்னேன்.
புகைப்படம் மீதான தங்களது ரசனையை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என சற்றுக் கோபப் பட்டார்கள்.
இன்னும் அழுத்தமாகவே சொன்னேன், அல்லது கேள்வியாகவே கேட்டேன் "புகைப்படம் எமது சமூகத்துக்குள் ஒரு கலையாக ஏற்றுக் கொள்ளப் பட்டதாக நினைக்கிறீர்களா?" என்று.
"இல்லை, அவ்வளவாக இல்லை" என்ற பதில்கள்தான் நண்பர்களிடமிருந்து வந்தன.
"அதைத்தான் சொன்னேன், இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தாலும் எனது கவிதைகளை உங்களில் அநேகம் பேர் விளங்கிக் கொள்ள மாட்டீர்கள் என்று.
ஏனெனில் நான் எடுக்கும் ஒவ்வொரு படத்தையும் கவிதை எழுதுவதான ஒரு மனவோட்டத்துடனும், கற்பனைச் சிரத்தையுடனும்தான் எடுக்கிறேன்.
ஏனெனில் நான் எடுக்கும் ஒவ்வொரு படத்தையும் கவிதை எழுதுவதான ஒரு மனவோட்டத்துடனும், கற்பனைச் சிரத்தையுடனும்தான் எடுக்கிறேன்.
காட்சிக்குள் இருக்க வேண்டியதை இருத்தி, தேவையற்றதைத் தவிர்த்து, இருளையும் ஒளியையும் தேவைக்கேற்ப நறுக்கிப்போட்டு.... இப்படி இன்னும் இன்னும்....
எனக்கு எனது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கவிதை. ஆனால் உங்களுக்கு அப்படியா...?"
அது கன காலமாப் போச்சு.
இப்போ 2019இலும் அதையேதான் சொல்வேன்.
எனது கவிதைகளைப் புரிந்துகொள்ளவும், ரசிக்கவும் உங்களிற் பலருக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தாலும் முடியாது என்று.
கோபமடையும் நண்பர்கள் என்மீது கல்லையோ, மண்ணையோ விட்டெறியுங்கள் பாதகமில்லை.
எனது கவிதைகளைப் புரிந்துகொள்ளவும், ரசிக்கவும் உங்களிற் பலருக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தாலும் முடியாது என்று.
கோபமடையும் நண்பர்கள் என்மீது கல்லையோ, மண்ணையோ விட்டெறியுங்கள் பாதகமில்லை.
ஓம், இரண்டு மூன்று முழுப்பக்கச் செய்தி சொல்லும் விசயத்தை ஒரு படத்தில் சொல்லி முடிக்கும் கலையை 30வருசத்துக்கும் மேலாக முழு விருப்பத்தோடும், வெறித்தனத்தோடும் செய்து வருகிறேன்.
(அதுதானே எல்லா ஊடகப் படப்பிடிப்பாளனின் மிகச் சரியான பணியும்கூட)
(அதுதானே எல்லா ஊடகப் படப்பிடிப்பாளனின் மிகச் சரியான பணியும்கூட)
கடகங்கடகமாகச் சொற்களைக் குவித்து எருக்கும்பம்போல கூறு கட்டுவதைக் காட்டிலும் எனது ஒரு படத்தினூடாக செய்தியையும், கலை ரசனையையும் தரமுடியும் என்ற கர்வம் பிடித்தவன் தான். இது சரியான தனமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது ஆனால் அப்படித்தான் நான்.
சம்பந்தம் இருக்கோ இல்லையோ இந்த இடத்தில் ஒரு செய்தியைக் குறித்து வைத்துச் செல்லலாம் என நினைக்கிறேன்;-
இலங்கையில் பத்திரிகை செய்தித் தணிக்கை மிகமிக உக்கிரமாக இருந்த காலங்களில், குறிப்பாக 83, 84 காலப்பகுதிகளில் முடிவடையாத தலையங்கங்களோடு மட்டும் எல்லாப் பத்திரிகைகளும் வெளியாகிக் கொண்டிருந்தன.
உதாரணத்துக்கு;- "இன்று அச்சுவேலியில் மூன்று....." இப்படித்தான் தலைப்புகள் மட்டும் பிரசுரமாகியிருக்கும்.
//மூன்றுபேர் அச்சுவேலியில் ராணுவத்தால் சுடப்பட்டு இறந்து விட்டார்கள்// என்ற செய்தியை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

83 நடுப்பகுதியில் பலாலி ராணுவத்துக்கு ஐந்து கவசவாகனங்கள் புதிதாக இறக்கப் பட்டிருந்தன.
அந்த நாட்கள்தான் ஸ்ரீலங்கா இராணுவம் தமிழ்ப் பிரதேசங்களில் கண் மண் தெரியாமல் சுடத் தொடங்கிய ஆரம்ப காலங்கள். சுட்ட உடல்களைக் குவித்துப்போட்டு எரித்தது.
இராணுவம் புரியும் அட்டூழியங்களை சில புகைப்படக்கார நண்பர்கள் அலைந்தலைந்து படங்களெடுத்தோம்.

அந்தத் தருணத்தில் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவன் நண்பன் கேதீஸ்வரனைப் பலியும் கொடுக்க நேர்ந்தது.
("சக்தி" பெண்கள் சஞ்சிகையின் ஆசிரியர் தயாநிதி அவர்களின் சகோதரன்)
நாம் எடுத்த படங்களை யாழ்.பல்கலைக் கழகத்தின் அருகாமையில் இயங்கிவந்த "பேபி போட்டோ"வில் பிறிண்ட் செய்து கொள்வோம். அங்கும் புகைப்படக் கலைஞன் தோழன் சிவா முழு ஒத்துழைப்பைத் தந்தார்.
கழுவி எடுத்த படங்களை செய்தியாக வடிவமைக்க வேண்டுமல்லவா,
அப்போது யாழில் பிரபலமான ஒரு ஸ்ரூடியோ புதிய தொழில்நுட்பமான இரண்டு போட்டோஸ்ரட் மெஷின்களையும் வைத்திருந்தார்கள்.
அப்போது யாழில் பிரபலமான ஒரு ஸ்ரூடியோ புதிய தொழில்நுட்பமான இரண்டு போட்டோஸ்ரட் மெஷின்களையும் வைத்திருந்தார்கள்.
அங்கு கராஜ் கதவால் சென்று, எம்மிடமிருக்கும் காசுக்கு அளவாக போட்டோக் கொப்பிகள் செய்வோம். (படங்களுடன் கூடிய சிலவரிச் செய்திகள் கையெழுத்தில்.
அங்கு வேலை செய்த இரண்டு இளைஞர்கள் பார்த்தும் பாராமல், நாம் கொடுக்கும் பணத்தைவிட அதிகமாகவே பிரதிகள் தருவார்கள். நாங்கள் வெவ்வெறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று மக்களுக்கு விநியோகித்தும், சுவர்களில் ஒட்டியும் செய்திகளைத் தெரிவித்தோம் மக்களுக்கு. (அந்த நாட்களின் நான் அப்பரின் கருவாட்டு வாடிக்குச் சென்றால், போகும் தருணங்களில் எனது கைச் செலவுக்கென, சாப்பாட்டுக்கெனப் பணம் தருவார் 10ரூபாய், 20ரூபாய். அப்போ அந்தப் பணம் இதற்கான பெரும் தொகையாகத் தெரியும்)
அந்தக் களங்கள்தான் எங்களுக்கான அன்றைய பயிற்சிகளும் பாடங்களும், கூடவே பணிகளுமாயிருந்தன. அக்காலத்தில் யுத்தகாலப் பணியாக இருந்த புகைப்படக்கலை, பின் கலையாகவும், பின் கலையும் தொழிலும் எனவாகவும் ஆனது.
இயக்கத்தை விட்டு விலகி வரும்போது "மக்களுக்கான பணி செய்ய எனக்கு இந்த ஒரு கமெரா போதும்" என்று சொல்லிவிட்டுத்தான் வெளியேறினேன். அந்த உழைப்புத்தான் 1986ம் ஆண்டு எனது முதலாவது புகைப்படக் கண்காட்சி.
அதுவே எனது கவிதைகளைக் கீறும் மண்டா முனையுமானது.
எனது கலைப்படைப்பு உனக்கு விளங்கவில்லை என்பதற்காக படைப்பதை நான் நிறுத்த முடியாது. அது விளங்க வேண்டியவர்களுக்கு விளங்கினால் போதும்.
நான் எனது சனத்தைப் பற்றித்தான் சொல்கிறேன்.
உனக்கும் அதை விளங்கிக்கொள்ளும் ஆசை இருந்தால் வா. வந்து ஆற அமர இருந்து பார், விளங்கினாலும் விளங்கக்கூடும். அது உனது ரசனையை, தேடலைப் பொறுத்தது.
அதை விட்டு, எனது படைப்புத் திறனை நிந்திப்பதும், நக்கல் விடுவதும், ஏளனம் செய்வதும், கண்டிப்பதும் ஏற்புடையதா என்ன?
இல்லை நண்பனே.
நீ இன்னும் ஒரு நூற்றாண்டை அதிகமாகவே எடுத்துக் கொள். அதுவரையும் நானில்லாவிடத்தும் எனது கலை காத்திருக்கும்.
மேலும் நான் ஜெயமோகனுக்காக ஒட்டிய படங்களை "எதிர்வினை" என்ற வகைக்குள்தான் செய்தேன்.
ஓம், அது நக்கல் எதிர்வினைதான். அவரது உப்புச்சப்பில்லாத நக்கலைவிட நான் ஒட்டிய படங்கள் ஒன்றும் குறைந்தவை அல்ல. இன்னும் சொல்லப்போனால் "கூடித்தான் போச்சு"
ஆக, எனதிந்த எதிர்வினைகளை நீங்கள் இளக்காரமாக எடுத்தது உங்கள் ரசனைக்குறைவும், மந்த புத்தியும்தான் காரணம் மக்கா.

அந்த விமர்சன முறையை உள்வாங்கவும், ரசிக்கவும் இனிமேலாவது பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள்.
இறுதியாக, "இலக்கிய சீமைக்கருவேலம்" என்பதுதான் ஜெயமோகன் பற்றிய எனது மதிப்பீடு. அவ்வளவே.
இறுதியாக, "இலக்கிய சீமைக்கருவேலம்" என்பதுதான் ஜெயமோகன் பற்றிய எனது மதிப்பீடு. அவ்வளவே.
("என்ன சண்டை? என்ன சண்டை ??" என முகநூலில் கேட்ட கவிதாவுக்கு சொன்ன பதிலையும் இங்கே தருகிறேன். ஏனெனில் மின் வரைகலையில் கவிதா இயங்கிக் கொண்டிருப்பதால் இலகுவாக விளக்கம் சொன்னது இது:-
//கவிதா, இன்றைய விமர்சன ஊடகங்கள் புதிய மின் வரைகலைத் தொழில்நுட்பங்களை உள்வாங்கி சமூக அரசியல், இலக்கியம் என கார்ட்டூன் காலத்தையும் கடந்து, "மீம்ஸ் கிரிட்டிஸம்" என்பதையும் தாண்டி எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் எமது இலக்கியப் புடலங்காய்களுக்கு யானை சாணி போட்டதுபோல கும்பம் கும்பமாய் எழுதினால்த்தான் இலக்கிய விமர்சனமாம். அந்தக் கும்பத்துக்குள் நீ என்ன கருமாந்திரமும் கொட்டலாம். ஆனால் படக்கலை செல்லாதாம். இவர்கள் பதினாறு பக்கங்களில் எழுதிக் குவிப்பதை ஒரு படத்தில் சொல்லி முடிக்கலாம் என்கிறேன் நான்.
ஓவியம், வரைகலைகள், புகைப்படக்கலை போன்றவை இவர்களுக்கு எப்போதுமே சுத்த சூனியம்.
அவற்றை ரசிக்கவோ, தேடவோ வக்கில்லை. தங்களது இந்த இயலாமையை, வறுமையை மூடி மறைக்க, படக்கலையை அம்மணம் தூசணம் லெவலுக்கு தள்ளி விடுகிறானுகள்.
அவற்றை ரசிக்கவோ, தேடவோ வக்கில்லை. தங்களது இந்த இயலாமையை, வறுமையை மூடி மறைக்க, படக்கலையை அம்மணம் தூசணம் லெவலுக்கு தள்ளி விடுகிறானுகள்.
என்ன செய்யலாம் சொல்லு? அதுதான். வேறொன்றுமில்லை//)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக