-சாஜீத் அம்சஜீத்-
தினகரன் 01.10.2016
இக்கால கட்டத்தின் சிறுகதைகள் இலக்கிய உலகினுள் அதிக கவனத்தினைத் தன்வசமாக்கி வைத்திருப்பதினை நாம் அவதானிக்கலாம். நாவல்கள் எனும் பெரும் பரப்பினைத் தாண்டியும், கவிதைகளின் தாக்கத்தினை மீறியும் சிறுகதைகள் நன்கு வாசிக்கப் படுகின்றன. கதை சொல்லல் பரப்பினை இலகு வடிவத்தில் தருவதற்கு முயற்சிக்கின்ற சிறுகதைகள் எல்லாக் காலகட்டத்திலும் அதிகப்படியான வர்ணனைகளைத் தவிர்த்தப்டியே வெளிவந்திருக்கின்றன.
திங்கள், 24 அக்டோபர், 2016
செவ்வாய், 11 அக்டோபர், 2016
கொல்வதும் வெல்வதும் மட்டுமல்ல வீரம், காப்பதும் வீரம்தான். மாவீரம்
நூல் விமர்சனம் - 09.10.2016இல் கனடாவில் நிகழ்ந்த "ஏழு கடல்கன்னிகள்" புத்தக விமர்சனத்தில் சிவம்.
கடையால்.
திருந்தாதி. ஆணம். விக்கினம். புருவத்தோரி. வாரி. விடந்தை. சுக்கானி.
திறவு. நுகைப்பு. வங்கு. கவிர். வெப்பல். வடு. தாவீது. கவண். குட்டூறு.
தலைச்சன். தண்டையல். நிட்டூரம். தங்கு தாணையம். சக்கிடுத்தார்.
பாய்ச்சுக் கம்பு. மண்டாடியார். கடிப்புத்தூர்.
பேக்கிலவாண்டி.
பரபாசு. தொடுவத்தோணி. நாவட்டப்பாறை. வட்டக்கல் பாறை. சாட்டாமாற்றுச்
செடிகள். தாமரைக் காத்தான்கள். வெள்ளாப்பு. பாடு. மைம்மல்(மம்மல்)
கிணாய்ச்சுக்கொண்டு (கிணாய்த்து) முள்ளிக்கொடி. இசங்குச்செடி. கிளாச்சி.
கண்ணா. குண்டுமணி. வீளி. வீச்சுளாத்தி. புங்கைமரம். மாலைவெள்ளி.
கப்பல்வெள்ளி. மூவிராசாக்கள்வெள்ளி. ஆறாம் மீன்கூட்டம். செட்டியைக்கொன்ற
வெள்ளி. விடிவெள்ளி.
வெள்ளி, 23 செப்டம்பர், 2016
எனக்கு இக் கதைகளில் ஒரு குறையுண்டு -ஹஸீன்-
("கதவு திறந்துள்ளது"
23.09.2016இல் அக்கரைப்பற்றில் நிகழ்ந்த மூன்று நூல்கள் பற்றிய உரையாடல். ஏழு கடல்கன்னிகள் பற்றி தோழர் ஹஸீன் முன்வைத்தவை.)
தமயந்தியின் கதையில் என்னை வசீகரித்தது அவருடைய மொழிதான்.
அவருடய மொழி முபாறக் அலி நானாவின் சேவலின் தொண்டை போல திறந்தது. அவருடைய வாழ்வுதான் அவர் மொழி. அவருடைய வாழ்வு அவருடைய உறவுகள். தமயந்தியின் உலகம் அப்புவும் குழந்தைகளும்.
அவர் புலம் பெயர்ந்து சேர்ந்த நாடும் மீனவ தேசம்.

ஏழு கடல்கன்னிகள் மீதான எனது வாசிப்பு -மிஹாத்-
("கதவு திறந்துள்ளது"
23.09.2016இல் அக்கரைப்பற்றில் நிகழ்ந்த மூன்று நூல்கள் பற்றிய உரையாடல். ஏழு கடல்கன்னிகள் பற்றி தோழர் மிஹாத் முன்வைத்தவை.)
Fiction is not imagination. It is what anticipates imagination by giving it the form of reality.
Jean Baudrillard _
தமயந்தியை தொண்ணூறுகளின் மத்திய காலத்திலிருந்து எழுத்துகள் வழியாக அறிந்திருக்கிறேன். அவர் தமிழ் போராட்ட இயக்கங்களோடு ஒரு காலத்தில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என்பதையும் அனுமானித்திருந்தேன்.
எனக்கு பிரதிகளின் மீதான பார்வையை மேற்கொள்வதில்தான் பிரியம் அதிகம் என்பதனால் தமயந்தியை மறந்து விடவே விரும்புகிறேன்.
ஏழு கடல்கன்னிகள் என்னும் ஏழு கதைகளின் தொகுதியானது வாசிப்பின் போது எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளையும் அபிப்பிராய மாற்றங்களையும் எனது புரிதல்கள்வழியே தெரிவிப்பது மட்டுமே எனது விருப்பம்.
உலக இலக்கியச் சூழலின் பிந்திய காலப் போக்குகளை ஒரு அளவீடாகக் கொண்டு ஒப்பீட்டு அடிப்படையில் இந்தக் கதைகளை நான் நோக்க விரும்பவில்லை.

கடலார் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் பேசிய தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள் தொகுதியை முன்னிறுத்தி சில குறிப்புகள் -அம்ரிதா ஏயெம்-
-அம்ரிதா ஏயெம்- 1) சிலர் மூன்றாம் நிலை அனுபவங்களை அதாவது ஒருவர் இன்னொருவருக்கும், அவர் அதை இன்னொருவருக்கு கூறியவற்றை, அனுபவித்தவற்றை பதிவு செய்வார்கள். அல்லது இரண்டாம் நிலை அனுபவங்களை தங்களுக்கு இன்னொருவர் கூறிய, அனுபவித்தவைகளை பதிவு செய்வார்கள். அடுத்தது முதலாம்நிலை அனுபவங்கள், தாங்கள் நேரடியாக ஈடுபட்ட, கண்டுகளித்த, உணர்ந்த விடயங்களை பதிவு செய்வார்கள். இந்தக் கடைசி நிலைதான் உணர்வுபூர்வமானதாகவும் அனுபவபூர்வமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும். தமயந்தியின் ஏழு கடற்கன்னிகளும் முதலாம் நிலை அனுபவங்கள்போல்தான் தெரிகிறது.
வெள்ளி, 17 ஜூன், 2016
திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது...
இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும்.
மணலை மைந்தன்
(பல வருடங்களுக்கு முன்பிருந்தே இவற்றைச் சொல்கிறோம். இப்போ மீண்டும் சொல்கிறோம்)
இன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லபப்படும் நிகழ்வு, பல மட்டங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் மூன்றாம்தர இந்திய நடிகனான விஜய் என்ற கோமாளியில் இருந்து இந்திய அரசியலில் இருப்பன, ஊர்வன, பறப்பன, குரைப்பன என அனைத்துத் தரப்பினரும் இந்திய மீனவர் கொலைக்கெதிராக கிளரந்தெழுந்துள்ளனர்.

சனி, 28 மே, 2016
ஏழாற்று கன்னிகள் -தமயந்தி-
நன்றி: ஆக்காட்டி 11 (ஏப்ரல்-ஜூன், 2016)
ஓவியங்கள்: றஸ்மி

ஈச்சாமுனைக் குன்று.
நயினாதீவின் வடகிழக்காக, குறிகாட்டுவானின் வடகரை முனையாக, பனைகளும், தென்னைகளும் கூட்டாகச் சேர்ந்து சாமரம் வீசும் பிரதேசம் ஈச்சாமுனை.
இந்த முனையின் கரையிலிருந்து தொடங்கும் இருபத்திநான்கு அடி ஆழமான பணிவு கடல்தான் ஈச்சாமுனைக் குன்று.
தீவுகளால் வேலியடைக்கப்பட்ட கடற்திடலின் ஆழமான பகுதியும் இதுதான்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)