வெள்ளி, 23 செப்டம்பர், 2016

எனக்கு இக் கதைகளில் ஒரு குறையுண்டு -ஹஸீன்-

  ("கதவு திறந்துள்ளது"
23.09.2016இல் அக்கரைப்பற்றில் நிகழ்ந்த மூன்று நூல்கள் பற்றிய உரையாடல். ஏழு கடல்கன்னிகள் பற்றி தோழர் ஹஸீன் முன்வைத்தவை.)


தமயந்தியின் கதையில் என்னை வசீகரித்தது அவருடைய மொழிதான்.
அவருடய மொழி முபாறக் அலி நானாவின் சேவலின் தொண்டை போல திறந்தது. அவருடைய வாழ்வுதான் அவர் மொழி. அவருடைய வாழ்வு அவருடைய உறவுகள். தமயந்தியின் உலகம் அப்புவும் குழந்தைகளும்.
அவர் புலம் பெயர்ந்து சேர்ந்த நாடும் மீனவ தேசம்.

ஏழு கடல்கன்னிகள் மீதான எனது வாசிப்பு -மிஹாத்-

 ("கதவு திறந்துள்ளது"
23.09.2016இல் அக்கரைப்பற்றில் நிகழ்ந்த மூன்று நூல்கள் பற்றிய உரையாடல். ஏழு கடல்கன்னிகள் பற்றி தோழர் மிஹாத் முன்வைத்தவை.)


Fiction is not imagination. It is what anticipates imagination by giving it the form of reality.
Jean Baudrillard _


தமயந்தியை தொண்ணூறுகளின் மத்திய காலத்திலிருந்து எழுத்துகள் வழியாக அறிந்திருக்கிறேன். அவர் தமிழ் போராட்ட இயக்கங்களோடு ஒரு காலத்தில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடும் என்பதையும் அனுமானித்திருந்தேன்.
எனக்கு பிரதிகளின் மீதான பார்வையை மேற்கொள்வதில்தான் பிரியம் அதிகம் என்பதனால் தமயந்தியை மறந்து விடவே விரும்புகிறேன்.
ஏழு கடல்கன்னிகள் என்னும் ஏழு கதைகளின் தொகுதியானது வாசிப்பின் போது எனக்குள் ஏற்படுத்திய உணர்வுகளையும் அபிப்பிராய மாற்றங்களையும் எனது புரிதல்கள்வழியே தெரிவிப்பது மட்டுமே எனது விருப்பம்.
உலக இலக்கியச் சூழலின் பிந்திய காலப் போக்குகளை ஒரு அளவீடாகக் கொண்டு ஒப்பீட்டு அடிப்படையில் இந்தக் கதைகளை நான் நோக்க விரும்பவில்லை.



கடலார் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் பேசிய தமயந்தியின் ஏழு கடல்கன்னிகள் தொகுதியை முன்னிறுத்தி சில குறிப்புகள் -அம்ரிதா ஏயெம்-


-அம்ரிதா ஏயெம்- 


1) சிலர் மூன்றாம் நிலை அனுபவங்களை அதாவது ஒருவர் இன்னொருவருக்கும், அவர் அதை இன்னொருவருக்கு கூறியவற்றை, அனுபவித்தவற்றை பதிவு செய்வார்கள். அல்லது இரண்டாம் நிலை அனுபவங்களை தங்களுக்கு இன்னொருவர் கூறிய, அனுபவித்தவைகளை பதிவு செய்வார்கள். அடுத்தது முதலாம்நிலை அனுபவங்கள், தாங்கள் நேரடியாக ஈடுபட்ட, கண்டுகளித்த, உணர்ந்த விடயங்களை பதிவு செய்வார்கள். இந்தக் கடைசி நிலைதான் உணர்வுபூர்வமானதாகவும் அனுபவபூர்வமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும். தமயந்தியின் ஏழு கடற்கன்னிகளும் முதலாம் நிலை அனுபவங்கள்போல்தான் தெரிகிறது.