வெள்ளி, 29 மே, 2020

பன்னிரண்டு இளநீல ரோஜாக்கள்

 -தமயந்தி-
------------------------ 
நன்றி: தாயகம் - கனடா 
E-Book வெளியீடு உயிர்மெய் 


காலை பத்து மணி.
படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. அடித்துப் போட்டாற்போல் அசதியாக இருந்தது.
கடந்த பல வருடங்களாக இந்த தினத்தில் காலை ஏழுமணியிலிருந்து இரவு ஏழுமணிவரை தெருத்தெருவாக அலைவேன் கமெராவோடு. முந்நூறுக்கும் குறையாத படங்களைப் பிடித்துக் கமெராக் கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பேன்.
பத்துப் பதினைந்து படங்களாவது மறுநாள் தினப்பத்திரிகையிலும் வெளியாகியிருக்கும். வழமையாகப் பிரசுரிக்கப்படும் எனது படங்கள் போலல்லாது, இந்தப் படங்கள் மட்டும் ஒருகணம் கன்னங்களை வருடிக் கொடுக்கும், மறுகணமே நகங்களால் நெஞ்சைக் கிழிக்கும். ஆனாலும் சற்றுநேரமாவது படங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்பேன்.

புதன், 27 மே, 2020

ஒரு புகைப்படக்காரன் பொய் சொல்லவேண்டியதில்லை -கருணாகரன்-

நேர்காணல் - சங்கர கம்பர் கதிர்வேலு 



சந்தித்துப் பதிவு செய்தவர்: கருணாகரன் (2012) 

2015 நவம்பர் 19ஆம் திகதி தனது சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகையில் மழை வெள்ளத்தில் நிரவியிருந்த கட்டில்லாத கிணற்றில் தவறி விழுந்து மரணித்த சிரேஷ்ட புகைப்பட ஊடகவியலாளர் சங்கர கம்பர் கதிர்வேலு அவர்களை 2012இல் கருணாகரன் அவர்கள் நேர்காணல் செய்து வெளியிட்டிருந்தார். நூலுருவிலும் "மகிழ்" பதிப்பகத்தினூடாக வெளியாகியுள்ளது. இன்றைய தேவை உணர்ந்து மீள்பதிவு செய்யப் படுகிறது. 
(நன்றி: புல்வெளி, கருணாகரன்)