இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும்.
மணலை மைந்தன்
(பல வருடங்களுக்கு முன்பிருந்தே இவற்றைச் சொல்கிறோம். இப்போ மீண்டும் சொல்கிறோம்)
இன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லபப்படும் நிகழ்வு, பல
மட்டங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான
தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் மூன்றாம்தர
இந்திய நடிகனான விஜய் என்ற கோமாளியில் இருந்து இந்திய அரசியலில் இருப்பன,
ஊர்வன, பறப்பன, குரைப்பன என அனைத்துத் தரப்பினரும் இந்திய மீனவர்
கொலைக்கெதிராக கிளரந்தெழுந்துள்ளனர்.