சனி, 28 மே, 2016

ஏழாற்று கன்னிகள் -தமயந்தி-

நன்றி: ஆக்காட்டி 11 (ஏப்ரல்-ஜூன், 2016) 
ஓவியங்கள்: றஸ்மி 



ஈச்சாமுனைக் குன்று.
நயினாதீவின் வடகிழக்காக, குறிகாட்டுவானின் வடகரை முனையாக, பனைகளும், தென்னைகளும் கூட்டாகச் சேர்ந்து சாமரம் வீசும் பிரதேசம் ஈச்சாமுனை.
இந்த முனையின் கரையிலிருந்து தொடங்கும் இருபத்திநான்கு அடி ஆழமான பணிவு கடல்தான் ஈச்சாமுனைக் குன்று.
தீவுகளால் வேலியடைக்கப்பட்ட கடற்திடலின் ஆழமான பகுதியும் இதுதான்.